தேசிய தலைவர்கள் புடைசூழ ஸ்டாலின் எழுச்சிப் பயணம்

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலும் 2019ல் நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வரும் வேளையில், அந்தத் தேர்தல்களில் வெற்றி மாலையைச் சூடிக்கொள்ள திமுக இப்போதே முழுமூச்சாகக் களத்தில் இறங்குகிறது. பாஜகவை எதிர்க்கும் இந்திய தலைவர்களை ஒன்றுதிரட்டி மீண்டும் எழுச்சிப் பயணத்தைத் தமிழ்நாட்டில் தொடங்க திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் தயாராகி வருகிறார். ஸ்டாலின் அடுத்த மாதம் 7ஆம் தேதி சென்னையில் தொடங்கும் எழுச்சிப் பயணத்தை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிறைவு விழா கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலத்தை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை என ஆறு மண்டலங்களாகப் பிரித்து ஸ்டாலினின் எழுச்சிப் பயணத்திற்குத் திட்டம் போடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் சுற்றுப்பயணம் முடிவடையும் நகரில் பொதுக்கூட்டம் நடக்கும் என்றும் அதில் தேசிய அளவில் பிரபலமாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன. இத்தலைவர்களில் லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், சீத்தாராம் யெச்சூரி, டி. ராஜா முதலானோர் உள்ளனர் என்று அவை தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!