அமித் ஷா மகன் வழக்கு; ஊடகத்திற்கு அழைப்பாணை

அகமதாபாத்: பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் தனியார் இணையத்தள ஊடகத் திற்கு அழைப்பாணை அனுப்பப் பட்டுள்ளது. அமித்ஷா மகனின் நிறுவனம் குறுகிய காலத்தில் பலமடங்கு லாபம் அடைந்துவிட்டதாக அந்த ஊடகம் கூறியிருந்தது. டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முந்தைய 2013-14ஆம் நிதி ஆண்டில் ஈட்டிய லாபத்தைவிட 2015-16ஆம் நிதி ஆண்டில் 16,000 மடங்குக்கு அதிகமாக லாபத்தை அந்நிறுவனம் ஈட்டி யுள்ளது என்று அந்த தனியார் இணையத்தள ஊடகத்தில் வெளி யான செய்தி தெரிவித்தது. இந்த தகவல் பல்வேறு ஊடகங் களில் அதிவேகமாகப் பரவியது. இதனால் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசா ரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால், இதனை மறுத்த பாஜக சம்பந்தப் பட்ட இணையத்தள ஆசிரியர், நிர்வாகி மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்தது. இதையடுத்து அஹமதாபாத் நீதிமன்றத்தில் சம்மந்தப்பட்ட இணையத் தள ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள் ளிட்ட எழுவர் மீது அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா கடந்த 9ஆம் தேதி அவதூறு வழக்குத் தொடர்ந் திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தனியார் இணையத்தளத்திற்கு அஹமதா பாத் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது. இதனால் இந்த வழக்கு விரைவில் விசார ணைக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. குஜராத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில் களங்கத்தைப் போக்கும் வகை யில் பாஜகவினர் இந்த எதிர் நட வடிக்கையை எடுத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!