மீண்டுவந்த வெஸ்ட் ஹேம்

லண்டன்: லண்டனின் வெம்பிளி அரங்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் லீக் காற்பந்து போட்டி ஒன்றில் முதல் பாதி ஆட்டத்தில் 0=2 என்று பின்னடைவு கண்ட வெஸ்ட்ஹேம் குழு பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் அதை சரியான முறையில் ஈடுகட்டியதோடு அல்லாமல் எதிர்த்து விளையாடிய ஸ்பர்ஸ் குழுவை அப்படியே புரட்டிப் போட்டு இறுதியில் 3=2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே ஸ்பர்ஸ் குழுவின் சோன் யிங் மின் தந்த பந்தை கோல் வலைக்குள் செலுத்தி வெஸ்ட் ஹேம் குழுவை அதிர்ச் சிக்குள்ளாக்கியுள்ளனர் மூசா சிசோக்கோ.

பின்னர், முதல் பாதி ஆட்டம் முடிவதற்குள் டெலி அலி ஸ்பர் சின் இரண்டாவது கோலைப் போட்டு வெஸ்ட் ஹேம் குழுவின் நிர்வாகியான ஸ்லாவன் பிலிச்- சுக்கு தீராத தலைவலியைக் கொடுத்தார். இங்கிலாந்து காற்பந்து உல கில் வரிசையாக இந்தப் பரு வத்தில் இதுவரை ஃபிராங் டி புவர், கிரேய்க் ஷேக்ஸ்பியர், ரோனல்ட் கூமன் என மூன்று காற்பந்து குழு நிர்வாகிகள் வேலைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் பிரிமியர் லீக் தர வரிசைப் பட்டியலில் 16ஆவது இடத்தில் இருக்கும் வெஸ்ட் ஹேம் குழுவின் பிலிச்சும் தனது வேலையைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!