சிங்கப்பூர் - அமெரிக்கா நல்லுறவு தொடரவேண்டும்

பிரதமர் லீ சியன் லூங் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படவுள்ள பல்வேறு நன்மைகள் பற்றி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளன. அமெரிக்காவுடனான நல்லுறவை சிங்கப்பூர் தொடர்ந்து கட்டிக்காக்க வேண்டியது அவசியம். ஆசியாவில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியதும் முக்கியம் என்று தம் பயணத்தின்போது பிரதமர் லீ வலியுறுத்திக் கூறினார். திரு லீ அமெரிக்காவில் இருந்தபோது சிங்கப்பூரும் அமெரிக்காவும் சிங்கப்பூர் ஏர்லைன்சுக்காக உடன்பாடு ஒன்றில் கையொப்பம் இட்டன. அதன்படி 39 விமானங் களை போயிங் நிறுவனத்திடமிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வாங்கிக்கொள்ளும்.

இந்த உடன்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்கள் சிங்கப்பூரில் செய்துள்ள முதலீடுகள் காரணமாக ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் குடியரசில் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை தம் பயணத்தின்போது பிரதமர் லீ சுட்டிக்காட்டினார். பொருளியல், பாதுகாப்பு, இன்ன பிற முக்கிய துறைகள் ஆகியவற்றுக்கு அமெரிக்காவையே ஆசியா பெரிதும் சார்ந்து இருக்கின்றது.

டிரம்ப் நிர்வாகத்திலும் அமெரிக்க ஒத்துழைப்புத் தொடரவேண்டும். ஆசியாவின் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் பெரிய பங்கு அமெரிக்காவுக்கு இருக்கிறது என்பதையும் திரு லீ நினைவூட்டி இருக்கிறார். சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சில் இரு நாடுகளின் உறவிலுள்ள கேந்திர முக் கியத்துவம் வாய்ந்த பங்காளித்துவம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகள், இருதரப்பும் பகிர்ந்து ஏற்றுக்கொள்ளும் உணர்வுகள் ஆகியன பற்றியும் தலைவர்கள் உரையாடினர்.

சிங்கப்பூர்=அமெரிக்கா நீடித்த ஒத்துழைப்பு இந்த வட்டாரத்துக்கும் அமெரிக்காவுக்கும் சாதகமான பல நன்மைகளை விளைவிக்கும் என்று அரசியல் நோக்கர் கள் கூறுகின்றனர். பொருளியல் உறவுகளைப் பொறுத்தவரையில், இரு தலைவர்களும் அமெரிக்கா=சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக உடன்பாடு பற்றியும் பேசினர். அது வர்த்த கத்தை விரிவடையச் செய்திருக்கிறது, பொருளியல் வளப்பத்தை மேம்படுத்தியுள்ளது, இருநாடுகளுக்கும் நன்மை தரக்கூடிய விரிவான உறவுகளை வளர்த்து உள்ளது. இருதரப்பு உறவுகளில் தற்காப்புத் தொடர்பான ஒத்துழைப்புகளும் பெருகியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் சிங்கப்பூர் 5.8 பில்லியன் டாலருக் கும் மேற்பட்ட தற்காப்புக் குத்தகைகளில் கையொப்பம் இட்டிருக்கிறது. இந்த ஆண்டில் வரி தொடர்பான சில உடன்பாடுகளில் கையொப்பம் இடவும் இருநாடுகளும் திட்டமிட்டுள்ளன. தென்சீனக் கடல் விவகாரம் பற்றியும் சிங்கப்பூரும் அமெரிக்காவும் இருநாட்டு அறிக்கையில் கருத்துரைத்துள்ளன.

அனைத்துலகச் சட்டத்தின்படி அமைதி, நிலைத் தன்மை, கப்பலோட்ட உரிமை, தகராறுகளுக்கு நியாய மான முறையில் தீர்வு காணுதல் ஆகியவற்றில் அமெ ரிக்காவும் சிங்கப்பூரும் உறுதிப்பாடு கொண்டுள்ளன. ஆசியான், மியன்மார் அரசாங்கத்துடன் இணைந்து மனிதாபிமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இருநாடு களும் உறுதி கூறின.

தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஆசியான் அமைப்புக்கு அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் தலைமை ஏற்கிறது. சிங்கப்பூரின் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வா‌ஷிங்டன் உறுதி கூறி இருக் கிறது. சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவு மேலும் தொடர்ந்து விரிவடைந்து இந்த வட் டாரத்துக்கும் உலக அரசியலுக்கும் பல்வேறு நன்மை களைத் தரவேண்டுமென்பதே நம் விருப்பம்.

இருநாடுகளுக்கும் இடையிலான நீடித்த ஒத்துழைப்பு இரு வட்டாரங்களின் அரசியல், பொருளியல், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாட்டுக்கு உறுதுணை யாக இருக்கும் என்பதோடு, மொத்தத்தில் இந்த உறவு உலகுக்கும் நல்ல பலன்களை ஏற்படுத்தித்தரும் என்று தாராளமாக நம்பலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!