மகுடம் சூடியது இங்கிலாந்து

கோல்கத்தா: இந்தியாவில் நடை பெற்ற பதினேழு வயதுக்குட்பட்டோ ருக்கான உலகக் கிண்ணக் காற் பந்துத் தொடரின் இறுதிப் போட்டி யில் இங்கிலாந்து 5=2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி U-17 உலகக் கிண்ணத்தை வென்றது இதுவே முதல்முறை. மான்செஸ்டர் சிட்டி குழுவின் இளம் வீரரான ஃபில் ஃபோடன் இங்கிலாந்து அணிக்காக இரு கோல்களைப் புகுத்தினார்.

ஆட்டத்தின் 31வது நிமிடத்திற் குள் இங்கிலாந்து அணி இரு கோல்களை விட்டுத் தந்தது. பார்சி லோனா ஆட்டக்காரரான செர்ஜியோ கோமெஸ் அந்த இரு கோல்களையும் போட்டார். முற்பாதி ஆட்டம் முடியும் தறு வாயில் லிவர்பூல் குழுவிற்காக ஆடி வரும் ரியான் புரூஸ்டர் ஒரு கோலை அடிக்க, ஸ்பெயினின் முன்னிலை ஒன்றாகக் குறைந்தது. இரண்டாவது பாதியில் ஆட்டம் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது. செசெக்னன் கடத்தித் தந்த பந்தை அழகாக வலைக்குள் தள்ளி, 58வது நிமிடத்தில் ஆட்டத்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தார் கிப்ஸ் ஒயிட்.

அதன்பின் ஃபோடன், மார்க் குஹி, மீண்டும் ஃபோடன் என மாறி மாறி கோல்கள் வர, இங்கிலாந்தின் வெற்றி உறுதியானது. அமெரிக்கா, பிரேசில் அணி களுக்கு எதிரான ஆட்டங்களில் 'ஹாட்ரிக்' கோல்களை அடித்த தாக்குதல் ஆட்டக்காரரான புரூஸ்டர், மொத்தம் எட்டு கோல்களுடன் அதிக கோலடித்தவர் பட்டியலில் முத லிடம் பிடித்தார். அதற்குப் பரிசாக அவருக்குத் தங்கக் காலணி கிடைத் தது. இறுதிப் போட்டியின் நாயகனாக ஃபில் ஃபோடன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

வெற்றியை உற்சாகத்துடன் கொண்டாடும் இங்கிலாந்து இளம் காற்பந்துக் குழுவினர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!