இன, சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய சமூக நிகழ்ச்சி

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூரில் இன, சமய நல் லிணக்கத்தைக் கட்டிக்காக்கவும் பொதுமக்களிடையே ஆரோக்கிய மான வாழ்க்கைமுறையை ஊக்கு விக்கவும் செட்டியார் கோவில் குழுமம் நேற்றுக் காலை நடை, மெதுவோட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்க அதிகாலை 6.15 மணிக்கெல்லாம் தேங் ரோட் டில் அமைந்துள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்கு தீவின் பல பகுதிகளிலிருந்து வரத் தொடங்கிவிட்டனர் பல இன, சமயங்களைச் சேர்ந்த கிட் டத்தட்ட 500 பங்கேற்பாளர்கள். கடந்த 2001ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சமூக நிகழ்ச்சி 15வது ஆண்டாக வெற்றி கரமாக நடந்தேறியது. இதில் பிர தமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் கலந்துகொண்டார்.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் தொடங்கிய இந்த 4.5 கிலோமீட்டர் தொலைவு கொண்ட நடை மற்றும் மெதுவோட்ட நிகழ்ச் சியில் பங்கேற்ற சிறுவர் முதல் பெரியவர் வரை சிங்கப்பூர் ஆற் றோரமாகச் சென்று திரும்பி கோவில் வளாகத்தை வந்தடைந் தனர். வெயிலும் மழையும் கலந்த தற் போதைய வானிலை நிலவர சூழ லில் நேற்றுக் காலை வானிலை மிதமாக அமைந்தது பங்கேற்பாளர் களுக்கு சௌகரியமாக இருந்தது. இன, சமய நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைக் கல்வி மூலம் ஒருவர் அறிந்துகொண்டாலும் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் பல்வேறு சமயத்தினர் ஒன்று திரண்டு மகிழ்ச்சியுடன் பங்கேற் கும்போது ஒருவர் மற்றொருவருக் கிடையே நிலவும் பரஸ்பர புரிந் துணர்வு வலுப்படுவதாகத் தெரி வித்தார் மூத்த துணை அமைச்சர் ஹெங்.

எனவே, சிங்கப்பூரில் இன, சமய உறவுகள் தொடர்ந்து வலுப் பெற சமூக நிகழ்ச்சிகள் சிறந்த தளமாக விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் நேற்றுக் காலை நடைபெற்ற நடை, மெதுவோட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ்வுடன் (இரண்டாவது வரிசையில் நடுவில்) நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரும் சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொண்டவர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவர் திரு மகேந்திரன் ராஜமாணிக்கம் (முதல் வரிசையில் இடக்கோடி). படம்: அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!