அமைச்சர் விவியன் இரண்டு நாட்கள் இந்தியா பயணம்

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இரு நாள் இந்தியப் பயணம் மேற் கொண்டு புதுடெல்லிக்கும் கவு காத்திக்கும் செல்கிறார். இந்தியா செல்லும் டாக்டர் விவியன், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் சேர்ந்து இந்தியா = சிங்கப்பூர் இருதரப்பு ஒத்துழைப்பு கூட்டு அமைச்சர் நிலைக் குழுவின் ஐந்தாவது கூட்டத் திற்குத் தலைமை தாங்குவார். அமைச்சரின் பயணம் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கு கிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று புதுடெல்லியில் சிங்கப் பூர்=இந்தியா அமைச்சர் நிலை குழுவின் கூட்டம் நடக்கிறது.

அந்தக் கூட்டம் இரு தரப்பு உறவைப் பரிசீலனை செய்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒத்துழைப்புத் துறைகள் பற்றி அந்தக் கூட்டம் விவாதிக்கிறது. அக்கூட்டத்தை அடுத்து இந்திய வெளியுறவு அமைச்சர், சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்தளித்துச் சிறப்பிப்பார். தெற்கு ஆசியா ஆய்வுக் கழகமும் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பும் சேர்ந்து புதுடெல்லியில் ஏற்பாடு செய் துள்ள 'இந்தியா= சிங்கப்பூர் =ஆசியான்: பொதுவான வரலாறு, பொதுவான எதிர்காலம்' என்ற சிங்கப்பூர் கருத்தரங்கம் 2017ல் இன்று அமைச்சர் உரை யாற்றுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!