கேட்டலோனியா சுதந்திரம்: எதிர்ப்புப் பேரணி

மாட்ரிட்: தனிநாடு பிரகடனம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைக்கப்படு வதாக ஸ்பெயின் அறிவித்தது. மேலும் கேட்டலோனியா நிர்வாகம் ஸ்பெயினின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த ஸ்பெயின் முடிவெடுத்துள்ளது. இத்தேர்தலில் கேட்ட லோனியாத் தலைவர் போட்டியிட முடியும் என்றும் ஆனால் அதுவரை அவர் கைது செய்யப்படாமல் இருந்தால் மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கேட்டலோனியா நாடாளுமன்றத்தைக் கலைத்து அதை நேரடிக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஸ்பெயின் அரசை எதிர்த்து அமைதியான வழியில் போராடுமாறு கேட்டலோனியா தலைவர் பியூங்டிமோண்ட் தமது ஆதரவாளர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார். இந்நிலையில் கட்டலோனியா சுதந்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஸ்பெயினுக்கு ஆதரவாகவும் கேட்டலோனி யாவின் பார்சிலோனா நகரில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் ஸ்பெயின் தேசியக் கொடியையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும் கையில் வைத்திருந்தனர். அதோடு ஸ்பெயினுக்கு ஆதர வாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். கேட்டலோனியத் தலைவர் பியூங்டிமோண்ட் மீதும் மற்ற கேட்டலோனியா அதிகாரிகள் மீதும் ஸ்பெயின் சட்டத்தை மீறியது தொடர்பில் குற்றம் சாட்டப்படவிருப்பதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!