மண்ணில் புதைந்து நடித்த கார்த்தி

கார்த்தி ஏற்கெனவே காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினால், வினோத் அளிக்கும் விளக்கம் கச்சிதமாக இருக்கிறது. 'சிறுத்தை' ஒரு கற்பனைக் கதை என்று சுட்டிக் காட்டுபவர், தன் படத்தில் ஒரு நிஜமான காவல்துறை அதிகாரி எப்படி இருப்பாரோ, அதே கார்த்தி அப்படியே திரையில் பிரதிபலிப்பார் என்கிறார். "நாயகனின் காவல்துறை வாழ்க்கையில் காதல் அத்தியாயம், பணி அத்தியாயம் உள் ளிட்ட பலவற்றைக் காட்டி இருக்கிறோம்.

இப்படிப் பல அத்தியாயங்கள் சேர்ந்ததுதான் 'தீரன் அதிகாரம் ஒன்று'. "தலைப்பைக் கேட்டதும் மேலும் சில பாகங்களாக இப்படம் வெளியாகுமா? என்று சிலர் கேட்கிறார்கள். அதை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இயக்குநர் சொல்வதைக் கச்சிதமாகச் செய்யக் கூடியவர் கார்த்தி என்று பாராட்டுகி றார் வினோத். மழை, வெயில், சேறு, மண் என இப்படத்துக்காக கார்த்தி அனைத்திலும் புரண்டு எழுந்திருப்பதாக குறிப்பிடுபவர், தான் கூறிய ஒரே காரணத்துக்காக மண்ணிலும் கூட அவர் புதையுண்டு கிடந்ததாக நெகிழ்கிறார்.

"மண்ணில் புதையச் சொன்னால் பலரும் யோசிப்பார்கள். சும்மா புதைந்து வெளியே வருவது கிடையாது. ஒன்றரை நிமிடங்கள் மண்ணுக்குள்ளே இருக்க வேண்டும். "படத்தின் முன்னோட்டத்தில் இந்தக் காட்சி இடம்பெறுகிறது. கார்த்தி மட்டுமின்றி மேலும் 13 பேர் மணலுக்குள் புதைந்து நடித்தார்கள். வறண்ட காற்று, கடுமையான வெயிலுக்கு மத்தியில் எந்ததொரு முன்னெச் சரிக்கையும் இன்றி, பள்ளம் வெட்டி, மணலை உள்ளே கொட்டி அக்காட்சியைப் படமாக்கி னோம். சின்ன முகச்சுளிப்புகூட இல்லாமல் சிரித்துக் கொண்டே நடித்துக் கொடுத்தார் கார்த்தி," என்கிறார் வினோத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!