1,000 கி.மீ. நீள கால்வாய்

புதுடெல்லி: பிரம்மபுத்திரா நீர் இந்தியாவில் பாய்வதைத் தடுத்து நிறுத்துவதற்காக சீனா மாபெரும் திட்டத்தை வகுத்துள்ளதாக ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் ஊடகம் தெரி வித்துள்ளது. இந்த பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக 1,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாய் அமைப்பது குறித்து சீனப் பொறியாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர் என்றும் அது கூறியது. இதன்மூலம் தெற்கு திபெத்தில் பிரம்மபுத்திரா என்றழைக்கப்படும் யார்லுங் சாங்போ (பிரம்மபுத்திரா) ஆற்றைக் கால்வாய் வழியாக ஜின் ஜியாங் மாகாணத்திற்குத் திருப்பி விட சீனா திட்டமிட்டுள்ளது.

திபெத்தில் உற்பத்தியாகி இந் தியாவை நோக்கிப் பாயும் பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே கட்டப் பட்டு வரும் அணையின் கட்டுமானப் பணிக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு கிளை நதியின் நீரோட்டத்தைச் சீனா தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு வரும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி கால்வாய் மூலம் சீனா மற் றொரு பகுதிக்கு எடுத்துச் செல்ல வுள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வட இந்தியா, வங்க தேசத்துக்கு வரவேண்டிய நீரின் அளவு குறையும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பிரம்மபுத்திரா நீரை தடுத்து ஜின்ஜியாங் மாகாணத் திற்கு எடுத்துச் செல்ல 1,000 கிலோ மீட்டர் தொலைவில் கால் வாய் அமைக்கப்படுவதாக ஊட கங்களில் வெளியான செய்தியைச் சீனா மறுத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித் துள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சான்யிங், "இதில் உண்மையில்லை. இது பொய்யான செய்தியாகும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!