கட்டுப்படாத கிருமிகளை எதிர்கொள்ள புதிய பணிக்குழு

மருந்துக்குக் கட்டுப்படாத கிருமி களை எதிர்கொள்ள புதிய பணிக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமிகளால் ஏற்படும் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாகக் குறிப்பிட்ட சில நோய்களுக்குச் சிகிச்சை அளிப் பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கிருமி எதிர்ப்பு மருந்துகளை தேவைக்கு அதிகமாக உட்கொள் வதால் இந்த நிலை ஏற்படும் சாத்தியம் உள்ளது. பணிக்குழு மூன்று இடங்களில் கவனம் செலுத்தும். மருந்துக்குக் கட்டுப்படாத கிருமிகள் தொடர் பான பிரச்சினை குறித்து வெவ் வேறு அமைப்புகளுக்கு இடையே கண்காணிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது, பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிய ஆய்வு நடத்துவது, நோய்கள் மற்ற நாடுகளுக்குப் பரவும் அபாயம் உள்ளதால் வெளிநாட்டுப் பங்காளிகளுடன் ஒத்துழைப்பது ஆகியவற்றில் பணிக்குழு கவனம் செலுத்தும்.

இந்தத் தகவலை சுகாதார, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று அறிவித்தார். "கிருமிகளுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அவை விற்பனைக்கு வந்த பின் காலப்போக்கில் அந்த மருந்துக்கும் கிருமிகள் கட்டுப்படாத நிலை உருவாகும். இதற்குக் காரணம் இந்தக் கிருமி எதிர்ப்பு மருந்து களைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதும் தவறாகப் பயன்படுத்துவதும் ஆகும்," என்று டாக்டர் லாம் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!