இரு சமய போதகர்களுக்கு ஜோகூரிலும் தடை

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட இரு வெளிநாட்டு இஸ்லாமியப் போதகர்களுக்கு மலேசியாவில் போதனை செய்ய அனுமதி கொடுக்கப்படும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அஹமது ஸாஹித் ஹமிடி தெரிவித்துள்ள நிலையில், ஜோகூர் மாநிலம் அவர்கள் இருவருக்கும் தடை விதித்துள்ளது. இந்தத் தடை குறித்த அறிக்கையை ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் நேற்று வெளியிட்டதாக மாநில சமய விவகாரக் குழுவின் தலைவர் அப்துல் முதலிப் அப்துல் ரஹிம் சுல்தான் கூறியுள்ளதை மலேசியா வின் பெரித்தா ஹரியான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸிம்பாப்வேயின் இஸ்மாயில் மெங்க், மலேசியாவின் ஹஸ்லின் பஹாரிம் ஆகிய இரு சமய போதகர்களும் சிங்கப்பூரின் பல கலாசார, பல சமயப் பண்புகளுக்கு எதிரான வகையில் போதித்து வருவதால் சிங்கப்பூர் உள்துறை அமைச்சு அவர்கள் இருவரும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதித்திருந்தது.

"அந்த இருவரும் இதற்கு முன் போதித்துள்ள கருத்துகள் பல இன மக்களுக்கிடையே உள்ள நல்லிணக்கத்தை உடைத்து விடும்," என்று திரு அப்துல் முத்தாலிப் தெரிவித்துள்ளார். ஜோகூர் இஸ்லாமிய சமயத் துறை, மாநிலத்தில் நடைபெறும் சமயப் போதனைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் இனங்களுக்கிடையே பிளவு ஏற்படும் வகையில் இருக்கும் போதனைகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு முத்தாலிப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!