அசாம் மேம்பாட்டில் சிங்கப்பூரின் பங்களிப்பு

இந்தியாவுடனான சிங்கப்பூரின் திறன் பயிற்சி கூட்டுமுயற்சிகளை ஆழப்படுத்தும் வகையில் இந்தியா வின் அசாம் மாநிலத்தில் ஆண் டுக்கு சராசரி 400 மாணவர் களுக்கு திறன்பயிற்சி வழங்கும் நிலையத்தை அம்மாநிலத்துடன் இணைந்து சிங்கப்பூர் அமைக்க வுள்ளது. கௌஹாத்தியில் அமைய வுள்ள இந்த வடகிழக்கு திறன் மையத்தை அமைப்பதற்கான புரிந் துணர்வுக் குறிப்பில் சிங்கப்பூரும் அசாமும் நேற்றுக் கையெழுத் திட்டன. இதனை இந்தியாவுக்கு இரண்டுநாள் பயணம் மேற் கொண்ட வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனவாலை இருவரும் பார்வை யிட்டனர்.

இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் லிம் துவான் குவானும் அசாமின் முதன்மைச் செயலாளர் அ‌ஷுடோஷ் அக்னிஹோத்ரி ஆகிய இருவரும் புரிந்துணர்வுக் குறிப்பில் கையெழுத்திட்டன. அத்துடன், திறந்தவெளி, பூங்கா இணைப்புப் பாதை கட்ட மைப்பை அமைப்பதற்கான உடன் பாடும் கையெழுத்திடப்பட்டது. தொழிற்நுட்பக் கல்விக் கழக சேவைகள், சிங்கப்பூர் கோஆப ரேஷன் எண்டர்பிரைஸ், சுர்பானா ஜூரோங் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் கையெழுத்திடுவதை பார்வையிட்டனர். முன்னதாக, புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த 'சிங்கப்பூர் கருத்தரங்கு 2017' பேசிய வெளியுறவு அமைச்சர், ஆசியானுடன் இந்தியா கூடுதல் ஈடுபாடு கொள்ள வேண்டும். அத்துடன் ஆகாயத்துறை, கடற் துறையில் தொடர்புகளை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை இந்தியா, சிங்கப்பூர், ஆசியான்: பொதுவான வரலாறு, பொதுவான எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற சிங்கப்பூர் கருத்தரங்கு 2017ல் உரையாற்றினார் (படம்). நேற்று அசாம் சென்ற வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனவாலைச் சந்தித்தார். படம்: தெற்காசிய கல்விக் கழகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!