துவாசில் ஆகப்பெரிய ஷெல் ஆலை திறப்பு

பிரபல ஷெல் எண்ணெய் நிறு வனம் துவாசில் தனது உராய்வுத் தடுப்பு எண்ணெய் ஆலையைத் திறந்திருக்கிறது. அந்த ஆலை உலகின் ஆகப் பெரிய ஆலை களில் ஒன்றாகும். இதன் காரணமாக எண் ணெய்த் தொழில்துறைக்கு உலகளவில் போட்டித்திறன்மிக்க இடமாக சிங்கப்பூர் தொடர புதிய ஊக்குவிப்பு கிடைத்திருக்கிறது. சிங்கப்பூரில் புதிய ஆலையில் ஷெல் நிறுவனம் செய்திருக்கும் முதலீடு, சிங்கப்பூர் மீது அந்த நிறுவனம் தொடர்ந்து வைத்திருக் கும் நம்பிக்கையைப் புலப்படுத்து வதாக இருக்கிறது என்று வர்த் தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் தெரிவித்தார். "உராய்வுத் தடுப்பு எண் ணெய்க்கு வலுவான தேவை ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஆசிய பசிபிக் வட் டாரத்தில் இடம்பெறும் வளர்ச்சி காரணமாக நன்மையடையக் கூடிய நல்ல நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது," என்று துவாசில் புதிய ஆலை திறப்பு விழாவில் திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார். உலகளாவிய கடல்துறை உராய்வுத் தடுப்பு எண்ணெய் சந்தை, ஆண்டுக்கு 4.17% வேகத்தில் வளர்ச்சி அடையும் என்று மதிப்பிடப்படுகிறது. அந்தச் சந்தையின் மதிப்பு 2024ஆம் ஆண்டு வாக்கில் US$3.33 பில்லியனாக (S$4.5 பில்லியன்) இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். உலகச் சந்தையில் 51%க்கு 2015ல் ஆசிய பசிபிக் வட்டாரம் பொறுப்பு வகித்தது. ஷெல் நிறுவனத்தின் புதிய ஆலை ஆசியாவிலேயே புதிய பாணியில் அமைந்திருக்கும் முதலாவது தொழிற்பூங்காவான 'சிங்கப்பூர் லூப் பார்க்' பகுதியில் அமைந் திருக்கிறது.

அந்த ஆலை அதிகளவு தானியக்கமயத்துடன் அதிநவீன தயாரிப்பு தொழில்நுட்பங்களைக் கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அதிநவீன உற்பத்தித்துறை தொழில்நுட்பங்களின் அனு கூலத்தைக் கைகொண்டு உற் பத்தித்திறனைப் பெருக்கி போட் டித்திறனைப் பலப்படுத்தும்படி நிறுவனங்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார். அரசாங்கம் எரிசக்தி, ரசாயன தொழில்துறைக்கான உருமாற்ற வழிகாட்டித் திட்டத்தைச் சென்ற மாதம் தொடங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!