தேங்கிய நீரில் நாற்று நட்டுப் போராடிய பெண்கள்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வண்ணான் குடிகாடு என்ற கிராமத்தில் புதிய காலனி பகுதியில் வசித்து வரும் மக்கள், தேங்கிய நீரில் நாற்று நட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக விருத் தாசலம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையில் அங்குள்ள வீடுகள் முன்பும் குடி யிருப்புப் பகுதிகள் முன்பும் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வீட்டிலிருந்து வெளி யே வர முடியாத மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். இதே பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதை யடுத்து வீடுகள் முன்பு தேங்கி யுள்ள தண்ணீரை அப்புறப் படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அதி காரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து நேற்று அப் பகுதி மக்கள், தேங்கியுள்ள தண் ணீரில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடு பட்ட பெண்களில் ஒருவர், வீடு கள் முன்பு தேங்கியுள்ள தண் ணீரை அகற்ற நடவடிக்கை எடுக் கப்படாவிட்டால் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!