வியட்னாமில் புயலும் மழையும்: 27 பேர் மரணம்

ஹனோய்: வியட்னாமின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்கடல் பகுதியில் உருவான தாம்ரே புயல் வலுவடைந்து மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசத் தொடங்கியது. இதுவரை 19 பேர் புயலுக்குப் பலியானதாகவும் 22 பேரைக் காணவில்லை என்றும் பேரிடர் தடுப்புக் குழு தெரிவித்துள்ளது. புயலில் சுமார் 626 வீடுகள் முற்றாக இடிந்து விழுந்ததாகவும் பாதுகாப்பு கருதி 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அக் குழு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையிலிருந்து வீசும் இப்புயல் காரணமாக ஆயிரக்கணக் கான வீடுகளின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டன. புயலில் 40,000க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந் தன. அடித்த பலத்த காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் விழுந்ததால் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புயலுடன் கூடிய கனமழை பெய்வதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வியட்னாமில் பலத்த புயல்காற்று வீசும் வேளையில் அங்குள்ள ஒரு மாநிலத்தின் ஆற்றில் ஒரு மீன்பிடிப் படகு கவிழ்ந்தது. உடனடியாக மீட்புக் குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்றனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!