மேம்பாடு காணும் வேலைவாய்ப்பு நிலவரம்

நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகி கள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) ஆகியோருக்கான வேலைவாய்ப்பு நிலவரம் மேம்பட்டு வருகிறது. உள்ளூர் ஊழியரணியில் இப்பிரி வினரின் விகிதமும் அதிகரித்து உள்ளது. அதே சமயத்தில், முழுநேர வேலை செய்வோரின் 'உண்மை' வருமானமும் அதிகரித்துள்ளது. 'உண்மை' வருமானத்தில் பண வீக்கம் கணக்கில் கொள்ளப்படு கிறது. இந்த விவரங்களை மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். பொருளியலை உருமாற்றி, புத்தாக்கத்தையும் உற்பத்தித்திற னையும் உயர்த்தி, தொழிலாளருக் கான தேவையைக் குறைத்து, பிஎம்இடி பிரிவினர் மாற்றங் களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள உதவிபுரிய அரசாங்கம் மேற் கொண்ட முயற்சியினால் ஊழியர் கள் அடைந்துள்ள நன்மைகளை அமைச்சர் விவரித்தார். பிஎம்இடி பிரிவினரில் சிங்கப் பூரர்களும் நிரந்தரவாசிகளும் அடங்குவர்.

சாதகமான மாற்றங்களை எடுத் துக்காட்டும் புள்ளிவிவரங்களை திரு லிம் வெளியிட்டார். இவ்வாண்டு, குடியிருப்பாளர் ஊழியரணியில் 56.1 விழுக்காட் டினர் பிஎம்இடி பிரிவினர். கடந்த 2014ம் ஆண்டு 53.5 விழுக்காட் டினரே பிஎம்இடி பிரிவினராக இருந்தனர். இதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வளர்ச்சி விகிதம் அதிகம் என திரு லிம் குறிப்பிட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு நான்கு பிஎம்இடி பிரிவினரிலும் மூவர் உள்ளூர்வாசிகள். ஐந்து ஆண்டுகளுக்குமுன், இந்தப் புள்ளிவிவரம் குறைவாக இருந்தது.

அப்போது கூடுதலாகச் சேர்த் துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு இரண்டு பிஎம்இடி பிரிவினரிலும் ஒருவர்தான் உள்ளூர்வாசி. வருமானப் புள்ளிவிவரங்களில் மத்திய சேமநிதி சந்தாவுக்கு முதலாளிகள் செலுத்திய சந்தாவும் உள்ளடங்கும். மனிதவள அமைச்சின் 'மாற்றி அமைத்துக்கொண்டு வளர்ச்சி அடைதல்' திட்டத்தின் புள்ளி விவரங்களையும் திரு லிம் வெளி யிட்டார். தொழிலாளர்கள் துரித தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் இத்திட்டம், இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில், 16,000க்கும் மேலான தொழிலா ளர்கள் புதிய வேலைகளில் சேர உதவியது. இவர்களில் பாதிக்கும் அதிக மானோர் (58 விழுக்காட்டினர்) பிஎம்இடி பிரிவினர். பத்தில் கிட்டத்தட்ட மூவர் 50 வயதுக்கு மேலானவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!