புகைபிடிக்க குறைந்தபட்ச வயது உயர்த்தப்படுகிறது

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து சிகரெட்டு களை வாங்கவும் விற்கவும் புகைக்கவும் குறைந்தபட்சம் 19 வயதாக இருக்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது சிகரெட் வாங்க, விற்க, புகைக்க குறைந்தபட்ச வயது 18. 2-021ஆம் ஆண்டு வரை குறைந்தபட்ச வயது உயர்ந்துகொண்டே போகும். 2021ஆம் ஆண்டிலும் அதற்குப் பிறகும் சிகரெட் வாங்க, விற்க, புகைபிடிக்க குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்கும். புகைபிடிப்பவர் களின் எண்ணிக்கையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இ=சிகரெட், இ-சிகார், இ-பைப்ஸ் ஆகியவற்றை வாங்க, விற்க, புகைக்க தடை விதிக்கப்படும்.

சிங்கப்பூரில் புகைபிடிப்பவர் களின் விதிகம் கடந்த பத்து ஆண்டுகளாக 12 விழுக்காட்டி லிருந்து 14 விழுக்காடு வரை இருந்து வருவது சுகாதார மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வருகிறது. 2020ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் புகைபிடிப்பவர்களின் விகிதத்தை 12 விழுக்காட்டுக்கும் கீழ் குறைக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை, சுகாதார அமைச்சு களின் நாடாளுமன்றச் செய லாளர் திரு அம்ரின் அமின் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் புகைபிடிப்பவர் களில் 95 விழுக்காட்டினர் 21 வயதுக்கும் குறைந்தவர்கள். புகைபிடிப்பவர்களில் 45 விழுக்காட்டினர் 18 வயதிலிருந்து 21 வயதுக்குள் புகைபிடிக்க ஆரம்பத்தனர். 18 வயதுக்கும் குறைந்தவர் களில் மூன்றில் இருவர் தங்கள் நண்பர்கள் அல்லது சக பள்ளி மாணவர்களிடமிருந்து புகை யிலையைப் பெறுகின்றனர். இளம் வயதில் புகைபிடிக்கத் தொடங்குபவர்கள் அப்பழக்கத் தைக் கைவிடுவதில் அதிக சிரமத்தை எதிர்கொள்வதாக திரு அம்ரின் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!