714 இந்தியர்கள் ரகசிய மூதலீடு:அரசு விசாரணை

தவிர்க்கும் வகையில் வெளிநாடு களில் 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு செய்திருப்பதை 'பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணங்கள் அம்பலப் படுத்தி உள்ளன. இந்த ரகசிய தகவல்கள் குறித்து பலதரப்பட்ட விசாரணை ஆணையங்கள் அடங் கிய குழு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதாக மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது. "பனாமா பேப்பர்ஸ் ஆவணங் கள் மூலம் கசிந்துள்ள ரகசியங் கள் குறித்து விசாரணைக் குழு தீர விசாரித்து உடனடி நடவ டிக்கை எடுக்கும்," என்று மத்திய நிதி அமைச்சும் தெரிவித்துள்ளது. 13.4 மில்லியன் பக்கங்கள் கொண்ட இந்தப் 'பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவணத் தகவல் களில் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரையுலகினர் உள் ளிட்ட பல்வேறு துறைகளையும் சார்ந்த 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

கறுப்புப் பணம் பதுக்கியவர் களின் எண்ணிக்கையின் அடிப் படையில் இப்பட்டியலில் இந்தியா 19வது இடத்தில் உள்ளது. "பாரடைஸ் பேப்பர்ஸ்' ஆவ ணங்களில் இதற்கு மேலும் ரகசியம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இவ்வளவு தகவல்கள் வெளியானதே ஒரு நல்ல முன்னேற்றம் தரும் செய்தி தான்," என்று மத்திய நிதி அமைச் சர் அருண் ஜெட்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரி வித்துள்ளார். தற்போது கசிந்துள்ள பாரடைஸ் பேப்பர்ஸ் ஆவணங்களில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பாஜக எம்பியான ஆர்.கே.சின்ஹா ஆகியோரின் பெயர்களும் இருப்ப தாகக் கூறப்படுகிறது.

அத்துடன் இந்தியாவைச் சேர்ந்த சன் டிவி நெட்வொர்க், வீடியோகான் இண் டஸ்ட்ரீஸ் லிமிட்டெட், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. "ஓமிட்யார் நெட்வொர்க் நிறுவனத்தின் பரி வர்த்தனைகள் அனைத்தும் சட்ட பூர்வமானவை. இவை டி.லைட் நிறுவனத்துக்காக மேற்கொள்ளப்பட்டன. இது தனிப் பட்ட நோக்கத்திலானது அல்ல," என்று இவ்விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயந்த் சின்ஹா டுவிட்டர் வலைத்தளத்தில் விவரம் பதிவிட்டுள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் ஜெயந்த் சின் ஹாவும் பாஜக எம்பியான ஆர்.கே. சின்ஹாவும் பதவி விலகவேண் டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!