விழிப்புணர்வு நடவடிக்கையில் இலியானா

இடுப்பழகி இலியானா மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களை அதிலிருந்து மீட்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் நடித்த இலியானா அண்மையில் மன உளைச்சலுக்கு ஆளானார். அதுபற்றி அவர் கூறுகையில், "சில மாதங்களுக்கு முன் எனக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. ஒரு காலத்தில் எப்போதுமே நான் சோர்வாகவும் கவலையுடனும் இருப்பேன். அந்தக் காலக் கட்டத்தில் ஒரு வகையான மனபாதிப்பு எனக்கு இருந்தது. அதுபற்றி அப்போது எனக்குப் புரியவில்லை.

"அதிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் நான் யாரிடமும் பேசாமல் வீட்டிற்குள்ளேயே இருக்க ஆரம்பித்தேன். அப்போது இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிலரது உதவி கிடைத்தது. அதற்குப்பிறகுதான் என் மனநிலை மாறியது "மன அழுத்தம் என்பது கற்பனை அல்ல. அது உண்மை யானது. அது தானாகவே சரியாகிவிடும் என்று தயவுசெய்து நினைக்கவேண்டாம். அதற்குச் சிகிச்சை கட்டாயம் பெறவேண்டும். தயவுசெய்து சிகிச்சைப் பெறுங்கள்," என்றார்.

'பர்பி' படத்துக்குப் பின் பாலிவுட்டில் அதிகப் படங்களில் நடிக்கும் நடிகையாகிவிட்டார் இலியானா. நடிப்பதைத் தவிர சத்தமில்லாமல் பல சமூக பணிகளிலும் ஆர்வமாக கலந்து கொள்கிறார். மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களை அதிலிருந்து மீட்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக் கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். "உங்கள் அழகு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறதே எப்படி?" என்று கேட்கிறார்கள். "வீட்டை விட்டு வெளியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமானால் அதற்கு முன் இரண்டு மணி நேரம் ஒப்பனை செய்வேன். அதனால் தான் நான் பார்ப்பதற்கு அழகாகத் தெரிகிறேன்," என்று சொல்லி சிரிக்கிறார் இடுப்பழகி இலியானா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!