தென்னிந்திய திரையுலகை வியப்பில் ஆழ்த்தும் ‘மெர்சல்’

விஜய் நடிப்பில் ஒரு சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த படம் 'மெர்சல்'. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேசமயத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. அதைத் தொடர்ந்து 'மெர்சல்' படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. திரையரங்கிற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பார்த்துச் செல்கின்றனர். இந்நிலையில் 'மெர்சல்' உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்து இருக்கிறது.

இதன்மூலம் தென்னிந் தியாவின் 'பாகுபலி', ரஜினி படத்தைத் தவிர்த்து இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது 'மெர்சல்' மட்டுமே எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் தெலுங்கில் 'மெர்சல்' படத்தைத் திரையிட தடை விதிக்கப் பட்டிருந்தது. அந்தத் தடையும் தற்பொழுது நீங்கி 'அதிரந்தி' என்ற பெயரில் அங்கும் வெற்றி கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழில் விஜய் பேசிய 'ஜிஎஸ்டி' வசனங்கள், வடிவேலு பேசிய 'டிஜிட்டல் இந்தியா' வசனங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இந்த வசனங்கள் அனைத்துமே தெலுங்கில் 'மியூட்' செய்யப்பட்டு 'அதிரந்தி' ஓடிக் கொண்டிருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!