ஸாகிரேப்: உலகக் கிண்ணக்

சுற்றின் முதல் ஆட்டத்தில் குரோவே‌ஷியாவும் சுவிட்சர் லாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஸாகிரேப்பில் நடைபெற்ற ஆட்டத்தில் குரோவே‌ஷியா 4-1 எனும் கோல் கணக்கில் கிரீஸைப் புரட்டி எடுத்தது. இந்த அபார வெற்றியின் விளைவாக அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட் டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை குரோவே‌ஷியா நெருங்கியுள்ளது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் குரோவே‌ஷியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

அதை கோலாக்கினார் ரியால் மட்ரிட் குழுவுக்காக விளையாடும் லுக்கா மோட்ரிச். ஆறு நிமிடங்கள் கழித்து, குரோவே‌ஷியா அதன் இரண் டாவது கோலைப் போட்டது. ஆட்டத்தின் 30வது நிமிடத் தில் கிரீஸ் அணித் தலைவர் சோக்ரட்டிஸ் பபாஸ்தாதோபோ லூஸ் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது. ஆனால் மூன்று நிமிடங்கள் கழித்து, குரோவே‌ஷியா அதன் மூன்றாவது கோலைப் போட்டது. இடைவேளையின்போது குரோ வே‌ஷியா 3-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதி ஆட்டம் தொடங்கி நான்கு நிமிடங்களில் ஆண்ட்ரேஜ் கிராமாரிச் குரோவே‌ஷியாவின் நான்காவது கோலைப் போட்டார். நாளை கிரீஸில் இவ்விரண்டு குழுக்களுக்கும் இடையே இரண் டாவது ஆட்டம் நடைபெறுகிறது. மற்றோரு 'பிளே ஆஃப்' ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 1=0 எனும் கோல் கணக்கில் வடஅயர்லாந்தைத் தோற்கடித் துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!