ஆர்ச்சர்ட் சாலையில் கிறிஸ்மஸ் உணர்வு

ஆர்ச்சர்ட் சாலையில் நேற்று முன் தினம் கிறிஸ்மஸ் ஒளியூட்டுக்குப் பிறகு அங்கு கிறிஸ்மஸ் உணர்வு தொடங்கிவிட்டது. 'தங்ளின் மால்' கடைத் தொகுதி முதல் 'பிளாசா சிங்கப் பூரா' கடைத்தொகுதி வரை, ஸ்காட்ஸ் சாலை உட்பட 2.88 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளக் குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒளியூட்டு விழாவில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டு ஒளி யூட்டைத் தொடங்கி வைத்தார். "முடிவற்ற வியப்பு" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த ஆண்டின் கிறிஸ்மஸ் ஒளியூட்டு, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கற்பனை உலகமாக ஆர்ச் சர்ட் சாலை விளங்குவதைச் சித்திரிக்கிறது.

அந்தக் கருப்பொருளுக்கு ஏற்ப விளக்குகளைப் பிரதிபலிக் கும் சுரங்கப்பாதையும் விளக்குக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்களும் ஆர்ச்சர்ட் சாலையில் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றோடு, 'நீ ஆன் சிட்டி சிவில் பிளாசா'வுக்கு அருகே ஆர்ச்சர்ட் சாலையில் முதல் முறையாக 'கிறிஸ்மஸ் வில்லேஜ்' எனும் நடவடிக்கை கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. அது இம் மாதம் 25ஆம் தேதி முதல் செயல் படத் தொடங்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!