செபாஸ்டியன் வெட்டல் வெற்றி

எஃப்1 கார் பந்தய வெற்றியாளர் விருதுப் போட்டிகளில் தோல்வி கண்ட செபாஸ்டியன் வெட்டல், நேற்று முன்தினம் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்ற எஃப்1 கார் பந்தயப் போட்டியில் ஃபெராரி காரை ஓட்டி வெற்றி வாகை சூடியுள்ளார். எஃப்1 விருதை நான்கு முறை தட்டிச்சென்ற வெட்டல், போட்டி தொடங்கியதிலிருந்து முன்னிலை பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. இவருக்கு அடுத்த இரண் டாவது நிலையில் வந்த மெர்சிடிஸ் காரை ஓட்டிய வால்ட்டேரி போட்டாசைவிட 2.8 வினாடிகளில் முந்தி வந்து போட்டியை வெட்டல் நிறைவு செய்தார்.

இவர்களுக்கு அடுத்த நிலையில் மற்றொரு மெர்சிடிஸ் கார் ஓட்டுநரான லுவிஸ் ஹேமில்டனிடமிருந்து வந்த கடும் போட்டியைத் திறமையுடன் சமாளித்து மூன்றாம் நிலையில் கிமி ராய்கோனன் வந்தார். இவருக்கு அடுத்தபடியான நான்காம் இடத்தை லுவிஸ் ஹேமில்டன் பிடித்தார். கடந்த ஜூலை மாதம் ஹங்கேரியில் நடைபெற்ற போட்டிக்குப் பின் நடைபெற்ற எட்டு எஃப்1 கார் பந்தயப் போட்டிகளில் வெட்டல் பெற்ற முதல் வெற்றி இது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது. அத்துடன், அவர் ஓட்டி வந்த ஃபெராரி காருக்கும் 2008ஆம் ஆண்டுக்குப் பின் பிரேசிலில் கிடைத்த முதல் வெற்றி இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!