லிட்டில் இந்தியாவில் களைகட்டவிருக்கும் கலை விழா

சுதாஸகி ராமன்

பூக்கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றுடன் ஆலயங்கள், பள்ளிவாசல் போன்ற வழிபாட்டுத் தலங்களாலும் நிரம்பி வழியும் லிட்டில் இந்தியா மீண்டும் கலை சார்ந்த நடவடிக்கைகளால் களை கட்டவிருக்கிறது. 'ஆர்ட் வாக் லிட்டில் இந்தியா' எனும் வருடாந்திர கலை விழா, சிங்கப்பூர் கலை வாரத்தையொட்டி நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை லாசால் கலைப் பள்ளி, சிங்கப்பூர் பயணத்துறை வாரியம், லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து நடத்தவுள்ள இந்தக் கலை விழா 'நகர்ப்புறப் புராணக் கதைகள்' எனும் கருப்பொருளைக் கொண் டது.

கலை வாரத்தையொட்டி சிறப்பு சுவரோவியங்கள் அந்தப் பகுதியை அலங்கரிக்கவுள்ளன. வியாழக் கிழமை முதல் சனிக்கிழமை வரை கதை நேரம், நாடகங்கள் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும். கடைவீடுகளின் சுவர்களை பெரிய ஓவியங்கள் அலங்கரிக்க, லிட்டில் இந்தியாவின் தெருக்களில் நடன, நாடக நிகழ்ச்சிகள் அரங் கேறும். இக்கலைகளின் மூலம் கலைஞர்கள் லிட்டில் இந்தியாவைப் பற்றிய மர்மக் கதைகளைக் கூற உள்ளனர். விழாவிற்காக லிட்டில் இந்தியா வட்டாரத்தின் கிளைவ் சாலை, டன்லப் சாலை, கேம்பல் லேன் போன்ற இடங்களில் ஏழு சுவர் ஓவியங்களும், மூன்று மேடை நிகழ்ச்சி அங்கங்களுடன் மரு தாணி இடுதல், யோகாசன வகுப்பு கள் போன்றவையும் இடம்பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!