சிங்கப்பூரில் ‘ஜென்டிங் ட்ரீம்’ சொகுசுக் கப்பல்

ப. பாலசுப்பிரமணியம்

ஆசியாவின் முதல் சொகுசு கப்பலாகக் கருதப்படும் டிரீம் குருசஸின் 'ஜென்டிங் ட்ரீம்' அடுத்த ஒராண்டுக்கு சிங்கப் பூரை தன் தளமாக கொண்டு தென்கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருக் கிறது. 335 மீட்டர் நீளம் கொண்ட 'ஜென்டிங் ஹாங்காங்' நிறுவனத் தின் 'ஜென்டிங் ட்ரீம்' சொகுசு கப்பலில் மொத்தம் 18 மாடிகள் உள்ளன. சுமார் 3,352 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த சொகுசு கப்பல் சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியா, மலேசியா, தாய் லாந்து, மியன்மார் போன்ற நாடு களுக்குச் செல்லும்.

இந்த சொகுசு கப்பலை சிங்கப்பூருக்கு வரவேற்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மரினா பே உல்லாசக் கப்பல் முனையத்தில் நங்கூரமிடப்பட்ட இக்கப்பலில் செய்தியாளர் கூட்டம் நேற்று நடைபெற்றது. சுற்றுப்பயணிகளை சிங்கப்பூ ருக்கு ஈர்க்கும் நோக்கத்துடன், ஜென்டிங் கப்பல் நிறுவனம் சிங்கப்பூர் பயணத்துறைக் கழ கத்துடனும் சாங்கி விமான நிலையக் குழுமத்துடனும் சேர்ந்து $28 மில்லியன் மதிப்பு உள்ள முத்தரப்புக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள் ளன.

சிங்கப்பூரைத் தளமாக கொண்ட சொகுசுக் கப்பல்களில் ஆகப் பெரியதாக 150,695 'டன்' எடையுள்ள 'ஜென்டிங் ட்ரீம்' விளங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!