இங்கிலாந்தைச் சாடும் மொரின்யோ

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் இங்கிலாந்து வீரர் பில் ஜோன்ஸுக்கு வலி நிவாரண ஊசி போடப்பட்டதற்காக இங்கி லாந்துக் குழுவின் நிர்வாகி சௌத் கேட்டை மொரின்யோ சாடியுள்ளார். இங்கிலாந்து, ஜெர்மனி குழுக் கள் கடந்த சனிக்கிழமை அனைத்துலக நட்புமுறை ஆட் டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் விளையாடு வதற்காக ஜோன்ஸுக்கு ஆறு வலி நிவாரண ஊசிகள் போடப் பட்டது என்று கூறியுள்ளார் மேன்யூ நிர்வாகி மொரின்யோ. "வலி நிவாரண ஊசிகள் போட்டுக்கொண்டு என் விளை யாட்டாளர்களும் களமிறங்கி உள் ளனர்.

"ஆனால் முக்கியமான ஆட் டங்களில் விளையாட வேண்டிய சூழலில் மட்டுமே இம்மாதிரியான முடிவுகளை நான் எடுத்துள்ளேன். "நட்புமுறை ஆட்டத்திற்காக ஜோன்ஸுக்கு வலி நிவாரண ஊசி போட்டதுதான் வருத்தமளிக் கிறது. "விளையாட்டிற்கு இங்கிலாந்து தயாராகி க்கொண்டி ரு ந்தபோது ஜோன்ஸுக்கு வலி நிவாரண ஊசி போடப்பட்டது. "அதன் பின்னும் அவரது உடல்நிலை கைகொடுக்காத நிலை யில், ஆட்டம் தொடங்குவதற்கு முன் மேலும் சில ஊசிகள் போடப் பட்டன. "வலியின் காரணமாக ஆட்டத் தில் இருந்து அவர் வெளியேறிய பிறகும் அவருக்கு ஊசி போடப் பட்டது," என்றார். ஜோன்ஸின் காயம் மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து நேற்று நடந்த நியூகாசல் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை.

ஜெர்மனிக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் இங்கிலாந்துக் குழுவிற் காக விளையாட வேண்டும் என்பதால் ஜோன்ஸுக்கு ஆறு வலி நிவாரண ஊசிகள் போடப்பட்டது என்கிறார் மொரின்யோ. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!