நியூகாசலைப் புரட்டி எடுத்த மேன்யூ வீரர்கள்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் நியூகாசல் குழுவை 4-1 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் நேற்று அதிகாலை பந்தாடியது. சொந்த மண்ணில் மிகுந்த முனைப்புடன் விளையாடிய யுனை டெட் வீரர்களைச் சமாளிக்க முடியாமல் நியூகாசல் ஆட்டக் காரர்கள் தத்தளித்தனர். ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் நியூகாசலின் கெய்ல் அனுப்பிய பந்து வலையைத் தொட்டதும் ஓல்ட் டிராஃப்பர்ட் விளையாட்டரங் கத்தில் கூடியிருந்த யுனைடெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந் தனர். ஆனால் நியூகாசல் கோல் போட்ட பிறகு யுனைடெட் வீரர்கள் விழித்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தினர்.

எறும்பு ஊர ஊர கல்லும் தேயும் என்ற பழமொழிக்கு ஏற்ப யுனைடெட் விடாமல் நடத்திய தாக்குதல்களுக்குப் பலனாக அக்குழு கோல் போட்டது. ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் மார்ஷல் தலையால் முட்டிய பந்து கோலானது. ஆட்டத்தைச் சமன் செய்த உற்சாகத்துடன் விளையாடிய யுனைடெட் இடைவேளைக்கு முன்பாக அதன் இரண்டாவது கோலைப் போட்டது. இம்முறை யுனைடெட்டின் தற்காப்பு ஆட்டக்காரர் கிறிஸ் ஸ்மாலிங் தலையால் முட்டிய பந்து வலையைத் தீண்டியது. இடை வேளையின்போது யுனைடெட் 2-1 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதி ஆட்டத்திலும் யுனை டெட்டின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் மார்கஸ் ரேஷ்பஃர்ட் மிக அருமை யாகப் பந்தைக் கொடுக்க, யுனை டெட்டின் மூன்றாவது கோலைப் போட்டார் பால் பொக்பா. ஆட்டத்தின் 70வது நிமிடத் தில் நியூகாசல் தற்காப்பு ஆட்டக் காரர்களை எளிதில் கடந்து சென்ற ரொமேலு லுக்காகு பந்தை வலை நோக்கி அனுப்பினார். மின்னல் வேகத்தில் சென்ற பந்தைத் தடுக்க நியூகாசல் கோல்காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிய யுனைடெட் கொண்டாட்ட மழையில் நனைந்தது. மற்றோர் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது. இடைவேளைக்கு முன்பு ஆர்சனலின் முஸ்டாஃபியும் சஞ்சேசும் போட்ட கோல்கள் ஸ்பர்சின் கதையை முடித்து வைத்தது.

பந்தைத் தலையால் முட்டி மான்செஸ்டர் யுனைடெட்டின் இரண்டாவது கோலைப் போடும் கிறிஸ் ஸ்மாலிங் (இடமிருந்து இரண்டாவது). படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!