காற்பந்தாட்டத்தில் இளையர்கள்

முஹம்மது ஃபைரோஸ்

'ஃபுட்சால்' எனப்படும் காற்பந்தாட்டத்தைப் பற்றி பலரும் அறிந்திருந்தாலும் உள்ளரங்கு காற்பந்துத் திடலில் நடைபெறும் இந்த விளையாட்டு குறித்து முழுமையாக அறிந்திருப்பவர்கள் சிலர்தான். அந்த விளையாட்டு முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார் 36 வயது ஜெஸ்பர் ரிச்சர்ட் தோமஸ். காற்பந்து விளையாட்டு மீது அலாதி பிரியம் கொண்டிருக்கும் இவருக்கு, சிறு வயது முதலே 'ஸ்த்ரீட்' காற்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனுபவம் உண்டு. இவர் விளையாடியுள்ள பல்வேறு ஃபுட்சால் அணிகளில் ஒன்று 'டோர்செட் பாய்ஸ்'.

கடந்த 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை இந்த அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றிபெற்ற பெருமை இவருக்கு உண்டு. அதிகம் பிரபலம் இல்லாத ஃபுட்சால் போட்டிகள் மீது ஆர்வம் பெருகி வந்த நிலையில், இந்த விளையாட்டில் பயிற்சி அளிப் பதற்கு தேவையான உரிமத்தைப் பெற விரும்பினார் ஜெஸ்பர். சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் அப்போதைய பயிற்சி மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ஜித்தா சிங்கின் பரிந்துரைக்கு இணங்க 2014ல் மலேசியாவில் 'ஏஎஃப்சி ஃபுட்சால் 1ஆம் நிலை பயிற்றுவிப்பு' சான்றிதழைப் பெற்றார். இந்த நிபுணத்துவ சான்றிதழைப் பெற்றதுடன் சிங்கப்பூரின் முதல் ஃபுட்சால் பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ஜெஸ்பர். சிங்கப்பூர் திரும்பிய இவருக்கு சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் (எஸ்ஐடி) ஃபுட்சால் மன்றத்தில் பயிற்றுவிப்பாளர் பணி காத்திருந்தது.

அதேவேளையில், சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஃபுட்சால் அணியை வழிநடத்தினார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அந்த அணி தொடர்ச்சியாக பல போட்டிகளில் வென்றது. அத்துடன், இவ்வாண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற 'ஏஐஏ' வட்டாரப் போட்டியில் சிங்கப்பூரின் 'ஏஐஏ' ஃபுட்சால் அணியை மூன்றாவது நிலைக்கு இட்டுச் சென்ற ஜெஸ்பர் இந்தோனீசியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் பல்வேறு அணிகளுக்கு ஃபுட்சால் பயிற்சி அளித்து வருகிறார். உள்ளரங்கு காற்பந்துத் திடலில் ஐந்து பேர் கொண்ட அணிகள் பொருதும் ஃபுட்சால் போட்டியுடன் வழக்கமான காற் பந்துப் போட்டியை ஒப்பிடுகையில் போட்டி விதிமுறைகள் வேறுபடு கின்றன. திடலின் அளவும் காற்பந்தின் அளவும் வேறுபடும். தொழில்முறை காற்பந்து வீரராக சிறந்து விளங்க ஃபுட்சால் அடித்தளம் வகிக்கிறது என்ற ஜஸ்ப்பர், புகழ்பெற்ற தென் அமெரிக்க காற்பந்து வீரர்கள் பலரும் தொடக்கத்தில் ஃபுட்சால் விளையாடியதைச் சுட்டிக் காட்டினார்.

சரவாக்கில் ஃபுட்சால் பயிற்சி வகுப்பு ஒன்றில் விளையாட்டாளருக்கு காற்பந்து உத்திகளைக் கற்றுத் தரும் காற்பந்து விளையாட்டு மீது அலாதி பிரியம் கொண்டிருக்கும் ஜெஸ்பர் ரிச்சர்ட் தாமஸ். படம்: ஜெஸ்பர்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!