3 கோல் முன்னிலையை கோட்டைவிட்ட லிவர்பூல்

செவில்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறு திக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற லிவர்பூல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்திலேயே காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு லிவர்பூல் முன்னேறியிருக்கலாம். ஆனால் மூன்று கோல் முன்னிலையைக் கோட்டைவிட்ட லிவர்பூல் ரஷ்யாவின் ஸ்பார்டாக் மாஸ்கோவுடன் அடுத்த இரண்டு வாரங்களில் சொந்த விளை யாட்டரங்கமான ஆன்ஃபீல்ட்டில் மோதுகிறது. லிவர்பூல் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவது குறித்து அந்த ஆட்டத்தின் முடிவு நிர்ணயிக்கும். நேற்று முன்தினம் ஸ்பெ யினில் செவியாவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டம் லிவர்பூலுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் முடிந்தது. முற்பாதி ஆட்டத்தில் அபார மாக விளையாடிய லிவர்பூல் மூன்று கோல்களைப் போட்டு காலிறுதிக்கு முந்திய சுற்றை நெருங்கியது. ரொபேர்ட்டோ ஃபிர்மினோ இரண்டு கோல்களும் சாடியோ மானே ஒரு கோலும் போட்டனர். இந்த நிலை நீடித்திருந்தால் 'இ' பிரிவில் முதலிடத்தைப் பிடித்து கடந்த ஒன்பது ஆண்டு களில் முதல்முறையாக சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு லிவர்பூல் தகுதி பெற்றிருக்கும்

ஆட்டம் முடிய சில வினாடிகள் மட்டுமே எஞ்சியிருந்தபோது செவியா அதன் மூன்றாவது கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்ததும் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் லிவர்பூல் வீரர்கள் (சிவப்பு நிறச் சீருடை). படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!