ஆசை மச்சானை மணந்தார் நமீதா

நீண்ட நாளாகக் காதலித்து வந்த தன் ஆசை மச்சான் வீராவை தன் மனம்போல் மணம்புரிந்தார் நமீதா. இரு குடும்பத்தினர்களின் சம்மதத்துடனும் அவர்களது திரு மணம் திருப்பதியில் நேற்று நடந்தேறியது. குஜராத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்த நமீதா தொடர்ந்து படங்களில் ஒரு சுற்று வந்தார். சிலகாலம் வரை ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் நமீதா திகழ்ந்தார். மச்சான்ஸ், மச்சான்ஸ் என்று கொஞ்சிப் பேசித் தமிழக ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டார். அண்மைக்காலமாக வாய்ப்பு இல்லாமல் இருந்த அவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் மீண்டும் புகழ்பெற்றார்.

இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும் நடிகை நமீதாவுக்கும் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்குத் திருப்பதியில் உள்ள தாமரைக் கோயில் என்று அழைக்கப்படும் இஸ்கான் கோயிலில் குஜராத்தி இந்து முறைப்படி திருமணம் நடந்தது. சரத்குமாரும் ராதிகாவும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அண்மையில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காயத்ரி, கணேஷ் வெங்கட் ராம், ஆர்த்தி, ஹரிஷ் கல்யாண், சக்தி வாசு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். குஜராத்தைச் சேர்ந்த நமீதா, தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி, 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பிறகு 'ஏய்' படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.

'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'பம்பரக்கண்ணாலே', 'தகப்பன்சாமி', 'வியாபாரி', 'நான் அவனில்லை', 'அழகிய தமிழ் மகன்', 'ஜகன் மோகினி' உள்பட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். தமிழில் கவர்ச்சி நடிகையாக அடையாளப்படுத்தப்பட்ட நமீதா, ரசிகர்களை 'மச்சான்ஸ்' என்று அழைத்து அவர் களுடன் நெருக்கமானார். பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கடை திறப்பு விழாக் கள், திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வந்தார். கடைசியாக வீரேந்திர சவுத்ரி என்பவர் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நமீதா நடித்துக்கொண்டிருந்தார். அப்போது வீராவுக்கும் நமீதாவுக்கும் காதல் உருவானது. இந்தக் காதல் இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது. வேத மந்திரங்கள் முழங்க, பட்டுப் புடவையில் அலங்காரமாய் ஜொலிக்கும் நமீதாவின் கழுத்தில் தாலி கட்டினார் வீரேந்திர சவுத்ரி. நண்பர்கள், உறவினர்கள், பிரபலங்கள் தம்பதிகளை வாழ்த்தினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!