2019க்குள் கூடுதல் மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள்

மக்கள் செயல் கட்சி சமூக அற நிறுவனம் (பிசிஎஃப்) தனது மூத்தோர் பராமரிப்புத் திட்டத்தை விரிவாக்குதல் தொடர்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் மூன்று 'ஸ்பார்கல்கேர்' மூத்தோர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 300 மூத்தோருக்கு அந்த நிலை யங்களில் இடம் இருக்கும். முதலில் பாலர் பள்ளி துறையில் தான் தொடங்கிய 'ஸ்பார்கல் டாட்ஸ்' வர்த்தகத்தைத் தாண்டி இப்போது மூத்தோர் பராமரிப்புத் துறையில் தனது விரிவாக்கத்தைப் பெருக்கியுள்ளது பிசிஎஃப் அமைப்பு. இயூ டீ தொகுதியில் நேற்றுக் காலை இரண்டாவது 'ஸ்பார்கல் கேர்' மூத்தோர் பராமரிப்பு நிலை யத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்து பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சரும் பிசிஎஃப் நிர்வாக மன்றத்தின் தலைவருமான லாரன்ஸ் வோங் இந்த விவரங் களைத் தெரிவித்தார். முதியவர்களுக்கான உடற்பயிற்சிச் சாதனத்தில் முதியவர் ஒருவர் உடற்பயிற்சி செய்வதைப் பார்வையிடுகிறார் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (வலது). அவருக்குப் பின்னால் மார்சிலிங் - இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு அலெக்ஸ் யாம். படம்: மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!