பீஷான் பணிமனையில் பராமரிப்புக் காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு அடியில் உடும்பு ஒன்று மறைந்திருந்ததால் ஊழியர்களி டையே பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் ஊழியர்களில் ஒருவர் தைரியத்துடன் முன்வந்து உடும்பின் வாலைப் பிடித்து இழுத்து பணிமனையைவிட்டு வெளியேற்றினார். நேற்று முன் தினம் நடைபெற்ற சம்பவம் குறித்த காணொளி காட்சியை வாசகர் ஒருவர் ஸ்டோம்ப் இணையத் தளத்தில் பதிவேற்றியிருந்தார். அதில் ரயிலுக்கு அடியில் மறைந்திருந்த உடும்பை வெளி யேற்றுவதற்காக கம்புகளுடனும் டார்ச் விளக்குகளுடனும் ஊழி யர்கள் போராடுவதைக் காண முடிந்தது. சிறிது நேரத்தில் உடும்பு தரையில் விழுந்தது. உடனே ஊழியர் ஒருவர், "உடும்பை வெளியே துரத்து," என்று மற்ற வர்களிடம் கூறுகிறார்.
பீஷான் பணிமனையில் அழையா விருந்தாளியாக நுழைந்த உடும்பை ஊழியர் ஒருவர் வாலைப் பிடித்து இழுத்துச் சென்ற காட்சி. ரயிலுக்கு அடி யில் உடும்பு மறைந்திருந்த தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: ஸ்டோம்ப்