புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில், சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படம் 'சீமத்துரை'. கீதன், வர்ஷா பொல்லம்மா நாய கன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும் விஜி சந்திரசேகர், கயல் வின்செண்ட், மகேந்திரன், 'சுந்தர பாண்டியன்' காசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
"ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறுவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும் மரியாதை கொடுக்காமல் தொந்தரவு கொடுப்பதுதான் சீமத்துரையின் அடையாளம். "யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக்கொண்டிருப்பவனுக்குக் காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே இப்படத்தின் கதைக் கரு. வாழ்வியலின் அங்கமான காதலையும் அதன் மேல் கொண்ட பாசத்தையும் கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும் நிறம் மாறாமல் சொல்கிறோம்," என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.