பாலித் தீவு பயணத்தை சிங்கப்பூரர்கள் ஒத்திவைக்க அமைச்சு மீண்டும் வலியுறுத்து

பாலித் தீவின் அகுங் எரிமலை யின் சீற்றத்தைக் கணிக்க முடி யாமல் இருப்பதால் அத்தீவுக் கான சுற்றுலாப் பயணங்களை ஒத்திவைக்கும்படி சிங்கப்பூரர் களுக்கு உள்துறை அமைச்சு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. இந்தோனீசிய அதிகாரிகள் இன்னமும் எரிமலைக்கான எச் சரிக்கை நிலையை உச்சத்தில் வைத்துள்ளதை நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அமைச்சு சுட்டிக் காட்டியது. "அகுங் எரிமலையின் நிலை யை கணிக்க முடியவில்லை. எரி மலையிலிருந்து கிளம்பும் சாம்ப லால் மீண்டும் விமான நிலையம் மூட நேரிடலாம். "குறுகிய காலத்திற்குள்ளாக வே பயணத்துக்கு இடையூறுகள் ஏற்படலாம்.

"பாலியில் நிலைமை மேம்படும் வரை அங்கு பயணம் மேற்கொள் வதை ஒத்திவைக்கும்படி தொடர்ந்து சிங்கப்பூரர்களிடம் கேட்டுக் கொள்ளப்படும்," என்று அறிக்கை குறிப்பிட்டது. "நவம்பர் 27ஆம் தேதிக்குப் பிறகு உள்துறை அமைச்சின் நெருக்கடிகால குழு, பாலித் தீவின் அனைத்துலக விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டது. எரிமலை குமுறலுக்குப் பிறகு விமான நிலையம் மூடப் பட்டதால் பாதிக்கப்பட்ட சிங்கப் பூரர்களுக்கு தூதர் நிலையில் உதவிகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளுடனும் விமான நிறு வனங்களுடனும் சேர்ந்து செயல் பட்டு வருகிறோம். "மேலும் நவம்பர் 29ஆம் தேதி விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டபோது அங்கு சிக்கித் தவித்த சிங்கப்பூரர்கள் நாடு திரும்புவதற்காக விமான நிறுவனங்கள் சிறப்பு சேவை களை வழங்கி வருகின்றன," என்று அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!