ஜப்பானுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை எடுக்க அபே சூளுரை

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகள் ஜப்பானுக்கு 'உடனடி அச்சுறுத்தல்' என்று ஜப்பானிய நாடாளுமன்றம் நேற்று அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவோடு பேச்சுவார்த்தை நடத்துவதும் அர்த்தமற்றது என ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே கருத்துரைத்துள்ளார். வடகொரியா கடந்த வாரம் பரிசோதித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பானின் தனிப்பட்ட பொருளியல் வட்டாரத்துக்குள் அமைந்துள்ள கடல் பகுதியில் விழுந்ததை அடுத்து, அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதென ஜப்பானிய நாடாளுமன்ற மேலவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை

உருவாக்கும் பணியை வடகொரியா தொடர்வதையே இது காட்டுவதாக ஜப்பான் குறிப்பிட்டது. அனைத்துலக சமூகத்திற்கு எதிரான முக்கியமான இந்தச் சவாலைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது எனவும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது. அணுவாயுத, ஏவுகணைத் தொழில்நுட்பத்தை விட்டு வடகொரியா முற்றிலுமாக வெளியேறும் வரை தொடர்ந்து வடகொரியாவுக்கு அழுத்தம் தரப்போவதாக திரு அபே சூளுரைத்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!