ரயில் சுரங்கப்பாதைகளில் வெள் ளம் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் நிரந்தரக் குழு ஒன்றை நிலப்போக்குவரத்து ஆணையமும் பொதுப் பயனீட்டுக் கழகமும் அமைத்திருக்கின்றன. போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று இதனை அறிவித்தார். அடிப்படை வசதி ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கோ, அடிப்படை வசதி பராமரிப்பு பற்றிய கூட்டு கருத் தரங்கில் நேற்று உரையாற்றினார். "புதிய குழு நம்முடைய தலை முறைக்கு அப்பாலும் நடை முறைக்கு வரக்கூடிய நீண்டகால நடவடிக்கைகளை ஆராயும். அவற்றை அமல்படுத்தும்," என்று தெரிவித்தார்.
பொதுப் பயனீட்டுக் கழகத் தின் முன்னாள் தலைவர் டான் கீ பாவ் தெரிவித்த யோசனை அடிப்படையில் புதிய குழு அமை வதாக அமைச்சர் குறிப்பிட்டார். அத்தகைய ஒரு குழு, ஒவ் வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு தடவை சந்தித்து சுரங்கப்பாதை வெள்ளத் தடுப்பு தொடர்பான மேம்பாடுகளையும் புதிய நிலவரங் களையும் ஆராயலாம் என்று திரு டான் யோசனை தெரிவித் திருந்தார். இதில் தைவானின் தலைநகர் தைப்பேயை சிங்கப்பூர் பின்பற்ற லாம் என்று திரு டான் யோசனையில் குறிப்பிட்டார். எம்ஆர்டி சுரங்கப் பாதையில் பீஷான், பிராடல் நிலையங்களுக்கு இடையில் அக்டோபர் 7ஆம் தேதி வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வடக்கு=தெற்கு ரயில் வழித்தட சேவை 20 மணி நேரம் பாதிக்கப்பட்டது. 250,000 பயணிகள் சேவை இல்லாமல் தவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.