மாகாபா ஆனந்த், நிகிலா விமல் நடிக்கும் ‘பஞ்சுமிட்டாய்’

ஒரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் பட்டையைக் கிளப்புகிறார். மறுபக்கம் வெள்ளித்திரையிலும் அசத்தி வருகிறார் மாகாபா ஆனந்த். அவர் நாயகனாக நடித்து முடித் திருக்கும் படம் 'பஞ்சுமிட்டாய்'. இதில் நிகிலா விமல் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். மாகாபாவுக்கு கிராமத்தில் இருந்து சென்னைக்கு பிழைப்புத் தேடி வரும் புரோட்டா மாஸ்டர் கதாபாத்திரம். கதைப்படி சென்ட்ராயன் சென்னையைச் சேர்ந்த தேநீர் மாஸ்டராம். ஆனந்த் ஜோடியாக வரும் நிகிலா கிராமத்துப் பெண்.

"இரு நண்பர்கள் இடையேயான நட்பு, கணவன் மனைவி இடையேயான குடும்ப உறவு ஆகியவற்றை அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளோம். மேலும் சென்னை வாழ்க்கை, கிராமத்துச் சூழ்நிலை ஆகியவற்றை வைத்து கதையை நகர்த்தி இருக்கிறோம். "எனவே நகைச்சுவையும் யதார்த்த மும் சரியான கலவையைக் கொண்டி ருக்கும். எல்லா மனித உணர்வுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் விறு விறுப்பாகவும், சுவாரசியமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது," என்கிறார் இயக்குநர் எஸ்.பி.மோகன். படத்தில் மாயதந்திர காட்சிகளும் உள்ளன. ரஜினியின் '2.0' படத்தில் பணியாற்றும் சீனிவாச மோகன்தான் இவற்றை வடிவமைத்துள்ளார். "படத்தின் கதையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் சீனிவாச மோகன் அமைத்துள்ள மாய தந்திரக் காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும். எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்தக் காட்சிகள் அமைந்து போனதில் இரட்டிப்பு மகிழ்ச்சி," என்கி றார் எஸ்.பி.மோகன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!