இலங்கைக்கு இமாலய இலக்கு

புதுடெல்லி: மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங் கைக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது இந்தியா. இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 536 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 356 ஓட்டங்கள் எடுத்திருந்தது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி, 373 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 163 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங் கியது. இதிலும் 5 விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் எடுத்து ஆட் டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

இதன் மூலம் இலங்கை அணிக்கு இந்திய அணி 410 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித் தது. இதற்கிடையே காற்றுமாசு கார ணமாக சிரமப்பட்ட இலங்கை வீரர் லக்மல், வாந்தி எடுத்ததால் மைதானத்தில் இருந்து வெளி யேறி, சிறிது நேரம் கழித்து மீண் டும் வந்தார். தொடர்ந்து தனது இரண் டாவது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட்டு கள் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்திய பந்தடிப்பாளர் புஜாராவின் (இடமிருந்து இரண்டாவது) விக்கெட்டைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இலங்கை வீரர்கள். டெல்லியில் காற்றுமாசு காரணமாக சிரமப்பட்ட இலங்கை வீரர்கள் முககவசம் அணிந்து விளையாடினர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!