புது நாயகனுடனும் ஜோடி சேர்வேன் - ரம்யா நம்பீசன்

பிற மொழிப் படங்களிலும் நடிப்பதால் தமிழில் தொடர்ந்து நடிக்க இயலாமல் இடைவெளி ஏற்படுவதாகச் சொல்கிறார் ரம்யா நம்பீசன். தற்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். தமிழில் இவரது நடிப்பில் 'சத்யா', 'நட்புனா என்னன்னு தெரியுமா' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அறிமுக நாயகனாக இருந்தாலும் ஜோடி சேரத் தயார் என்கிறார் ரம்யா. "என்னைப் பொறுத்தவரை நாயகன் புதுமுகமாக இருந்தாலும் கவலை இல்லை. ஏனெனில் ஒரு படத்துக்கு கதைதான் ரொம்ப முக்கியம். "இதற்கு முன்பு 'சேதுபதி' படத்தில் அம்மாவாகவும், 'ஒருநாள் ஒருகனவு' படத்தில் ஸ்ரீகாந்த் தங்கையாகவும் நடித்திருக்கிறேன். அதன் பின் 'ராமன் தேடிய சீதை', 'குள்ள நரி கூட்டம்' போன்ற படங்களில் நாயகியாக நடித்தேன். "தங்கையாக நடித்தால் கடைசி வரை தங்கையாகத்தான் நடிக்க வேண்டி இருக்கும் என்றார்கள். அதை உடைக்கவே நாயகியானேன்," என்கிறார் ரம்யா நம்பீசன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!