திருமலை: பொதுவாக பெரும் பாலான மாநிலங்களைச் சேர்ந்த பெரும்புள்ளிகளின் வீட்டிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமானத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வந்த நிலையில் இப்போது திருப்பதி தேவஸ் தானத்தின் பரிந்துரையின் பேரில் திருமலையில் உள்ள 90 உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சோதனை குறித்தான அறிக்கை ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் உள்ள பல்வேறு உணவகங்களிலும் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அரிஹரி சேவா சமிதி என்ற அமைப் பினர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி திருப்பதி தேவஸ் தானத்துக்கு உத்தரவிட்டனர். ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாக இப்போது வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.