இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக் கில் முன்னாள் மத்திய அமைச்ச ரான திமுகவின் ஆ.ராசா, மாநி லங்களவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மக ளுமான கனிமொழி உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்ததாக அப்போதைய மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் புயலைக் கிளப்பினார்.
அதன் காரணமாக மத்திய அரசுக்கு ஏறத்தாழ ரூ.176,000 கோடி வருமான இழப்பு ஏற்பட்ட தாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, அலைக்கற்றை முறைகேடு குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தில் புகார் அளிக்கப்பட்டு, பின் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப் பட்டது. அத்துடன், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி லஞ்சமாக அளிக்கப்பட்ட தாகவும் அதன் பின்னணியில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் இருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
விடுதலையான மகிழ்ச்சியில் கனிமொழி. படம்: இந்திய ஊடகம்