ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் கூட்டத் திற்குள் கார் புகுந்ததில் 19 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபல மான ஃபிளிண்டர்ஸ், எலிசபெத் ஸ்திரீட் களின் சந்திப்பில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே வெள்ளை நிற சுசுகி கார் ஒன்று மோதியதாக போலிசார் தெரிவித்தார். ஆஸ்திரேலிய நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. உடனடியாக அந்த காரின் ஓட்டுநரையும் இன்னோர் ஆடவரையும் போலிசார் கைது செய்தனர். இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதாக விக்டோரியா போலிஸ் ஆணையர் ரசல் பேரட் தெரிவித்தார். "வேண்டுமென்றே இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. சம்பவத்திற்கு என்ன காரணம் என இப்போதே கூற முடியாது. விசாரணை நடந்து வருகிறது," என்று அவர் சொன்னார்.
கிறிஸ்மஸ் திருநாள் நெருங்குவதால் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் பாதசாரிகள் மீது காரை ஓட்டிப் பலருக்குக் காயம் விளைவித்த செயல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய போலிசார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற சுசுகி கார் இறுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்றின்மீது மோதி நின்றது (இடது படம்). படம்: ராய்ட்டர்ஸ்