தென்கொரிய உடற்பயிற்சி நிலையத்தில் தீ: 29 பேர் மரணம்

சோல்: தென்கொரியாவில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் நேற்று திடீரென்று மூண்ட தீயில் குறைந்தது 29 பேர் மரணம் அடைந்ததாக அந்நாட்டு அதிகாரி கள் கூறினர். அவர்களில் பெரும்பாலானோர் தீப்புகையால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு காரில் மூண்ட தீ எட்டு மாடிகளைக் கொண்ட அந்த பயிற்சி நிலையத்தில் மளமள வென்று மிக வேகமாகப் பரவியதாக தீச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். தீ விபத்தில் காயம் அடைந்த 18 பேர் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டிருப்பதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 50 தீயணைப்பு வண்டிகளும் 60 தீயணைப்பாளர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டதாகக் கூறப்பட்டது. அந்தக் கட்டடத்தில் தீப்பற்றிய தற்கான காரணம் இன்னும் கண் டறியப்படவில்லை.

தென்கொரியாவில் தீ மூண்ட கட்டடத்திலிருந்து எழுந்த புகை அப்பகுதியை சூழ்ந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!