கோன்டே ஏமாற்றம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் எவர்ட்டனும் செல்சியும் இன்றிரவு மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் செல்சியின் தாக்குதல் ஆட்டக் காரர் அல்வாரோ மொராட்டா களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் கிண்ணக் காலிறுதி ஆட்டத்தில் போர்ன்மத்தை 2=1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது செல்சி. செல்சியின் வெற்றி கோலை மொராட்டா போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ன்மத்துக்கு எதிரான ஆட்டத்தில் மொராட்டாவுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இது அவருக்குக் காட்டப்பட்ட ஐந்தாவது மஞ்சள் அட்டை. இதன் விளைவாக இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது. இதுகுறித்து செல்சியின் நிர்வாகி அண்டோனியோ கோன்டே ஏமாற்றம் தெரிவித் துள்ளார். எவர்ட்டனுக்கு எதிராக குடிசன் பார்க் விளையாட்டரங் கத்தில் மொராட்டா குழுவில் இல்லாதது செல்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு என்று கோன்டி கூறினார். போர்ன்மத்துக்கு எதிராக வெற்றி கோலைப் போட்ட பிறகு பந்தைத் தமது சீருடைக்குள் வைத்து மொராட்டா கொண்டாடி னார். அந்தச் செயலுக்காக நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டை காட்டியிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இது உண்மையாக இருந்தால் நடுவரின் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாக கோன்டே தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!