வெற்றியில் தோல்வியும் தோல்வியில் வெற்றியும்

இந்தியாவின் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி அளித்திருக் கின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் 2012ல் 26 இடங்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, இப்போது 40க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடித்து ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கைப்பற்றி இருக்கிறது.

குஜராத் மக்கள் தொடர்ந்து ஆறாவது தடவையாக தங்கள் மாநிலத்தை ஆளும் பொறுப்பை பாஜகவிடமே ஒப்படைத்து இருக்கிறார்கள். இருந்தாலும் இப்போது மோடிக்கு அவர்கள் அளித்துள்ள குறைந்த அளவிலான ஆதரவு, ஆட்சியைப் பிடித்தாலும் தோல்வி அடைந்துவிட்ட தைப் போன்ற ஒரு கவலையை பாஜகவிடம் ஏற்படுத்தி விட்டது. இந்த இரு மாநிலங்களின் முடிவுகளை அடுத்து இந்தியாவின் 29 மாநிலங்களில் 19ல் இப்போது பாஜகவின் வெற்றிக்கொடி பறக்கிறது.

இந்திய வரலாற்றில் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு காலகட்டத்தில் இந்திரா காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி 18 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்திருந் தது. அந்தச் சாதனையை பாஜக முறியடித்துவிட்டது. நான்கு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி இப் போது நடக்கிறது.

சட்டீஸ்கர், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்கள் அடுத்த ஆண்டு தேர்தலைச் சந்திக்கும் நிலையில் உள்ளன. வரும் 2019ல் இந்தியா முழுவதும் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடக்கப்போகிறது.

இந்த நிலையில், குஜராத்தில் நடந்து முடிந்த தேர்தல், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டிற்கும் பல பாடங்களைப் போதிக்கும் தேர்தலாக இருந்தது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. இந்த இரண்டு கட்சிகளும் முறையே, பிரதமர் மோடியையும் ராகுல் காந்தியையும் முன் வைத்து அரசியல் நடத்தி வருகின்றன, நடத்தப்போகின் றன. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அவருக் கான ஆதரவை மக்கள் குறைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கோ 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகஅதிக ஆதரவை அளித்து இருக்கிறார்கள். இருந்தாலும் பாஜக ஆட்சிக்குப் பதிலாக தங்கள் மாநிலத்தை ஆட்சிபுரியும் பொறுப்பை, மோடியைத் தவிர வேறு ஒருவரிடம், அதாவது காங்கிரஸ் கட்சியிடம், ஒப் படைக்க அந்த மாநில மக்கள் இப்போது தயாராக இல்லை என்பதையே தேர்தல் காட்டுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!