ராகுலைப் பார்க்க 107 வயது பாட்டிக்கு ஆசை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 107 வயது பாட்டி ஒருவருக்கு, அந்தப் பாட்டியின் வேண்டுகோளுக்கு இணங்க தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். டுவிட் டரில் வாழ்த்தும் தெரிவித்தார். பாட்டியின் பேத்தி இதற்கு டுவிட்டரில் நன்றி குறிப்பிட்டார். "இன்று என் பாட்டிக்குப் பிறந்த நாள். அவருக்கு 107 வயது ஆகிறது. அவருடைய ஒரே ஆசை ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான். ஏன் என்று கேட்ட தற்கு ராகுல் மிகவும் அழகாக இருக்கிறார் என்று பாட்டி கூறினார்," என தீபாளி சிகாந்த் என்ற பெண் டுவிட்டரில் குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்த ராகுல் "அன்புள்ள தீபாளி, உங்கள் அழகான பாட்டிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறினேன் என்று சொல் லுங்கள். "அவருக்கு என் கிறிஸ்மஸ் வாழ்த்தையும் கூறிவிடுங்கள். அவரை என் சார்பில் கட்டியணைத் துக்கொள்ளுங்கள்.'' என்று குறிப்பிட்டார். இதற்குப் பின் டுவிட்ரில் வேறு ஒரு செய்தி அனுப்பிய தீபாளி, ராகுல் உண்மையான மனிதப் பண்பை வெளிப்படுத்தி இருக் கிறார். எல்லாருடைய வாழ்த்திற் கும் நன்றி'' என்று குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!