லிவர்பூல் கோல் மழை

லிவர்பூல்: சுவான்சி குழுவை வீழ்த்திய லிவர்பூல் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டி யலில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. சாலா உதைத்த பந்தை கோல் வலைக்குள் போட்டு லிவர்பூலின் கோல் கணக்கை 6வது நிமிடத் தில் துவக்கி வைத்தார் பிலிப் கொட்டின்யோ. அதன் பிறகு சுவான்சி குழு வின் ஆதிக்கத்தால் லிவர்பூல் வீரர்களால் முதல் பாதி ஆட்டம் முழுவதும் கோல் எதுவும் போட முடியவில்லை. ஃபெர்மினோ உதைத்த பந்து கோல் கம்பத்தை இருமுறை உரசிச் சென்றதே தவிர, கோல் வலைக்குள் செல்லவில்லை. ஆனால் பிற்பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதைச் சரிக் கட்டிவிட்டார் ஃபெர்மினோ. 52வது நிமிடத்தில் ஒரு கோலை போட்ட ஃபெர்மினோ மீண்டும் 66வது நிமிடத்தில் இன் னொரு கோலையும் போட்டார். இதற்கிடையே, அலெக்ஸாண் டர்=அர்னால்ட் இன்னொரு கோலை போட லிவர்பூலின் கோல் எண்ணிக்கை நான்கானது. கடைசி கோலை ஆக்ஸ்லேட் சேம்பர்லேன் போட 5-0 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் சுவான்சி குழுவிற்கு எதிராக லிவர்பூலின் இரண்டாவது கோலை போட்டார் ஃபெர்மினோ. - ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!