மின்-ஸ்கூட்டர்களில் பதிவு செய்யப்படாத 175 மின்னேற்றி பொருத்திகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்யப்படாத மின்னேற்றி பொருத்திகளை (சார்ஜிங் அடாப்டர்) மின்-ஸ்கூட்டர் விற் பனை செய்யும் ஆறு நிறுவனங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக 'ஸ்பிரிங் சிங்கப்பூர்' அமைப்பு மேற்கொண்ட சந்தைக் கண்காணிப்பில் இது தெரிய வந்துள்ளது. 'கார்பன்ரெவோ', 'இமார்க்கோ என்டர்பிரைஸ்', 'இஸ்கூட்.எஸ்ஜி', 'ஃபால்கான் பிஇவி' 'மினிமோட் டார்ஸ்-மேக்ஸ்டெக் பிளஸ்', 'ஸ்கேட்லைன் ஸ்கேட்ஸ்கூல்' ஆகியன அந்த ஆறு நிறுவனங்கள் என்று அவ்வமைப்பு தெரிவித்தது. சென்ற மாதமும் இம்மாதமும் 'ஸ்பிரிங் சிங்கப்பூர்' அமைப்பு மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில் பதிவு செய்யப் படாத 175 மின்னேற்றி பொருத்தி கள் பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள் ளப்பட்டுள்ளது. "பதிவு செய்யப்படாத இந்த மின்னேற்றி பொருத்திகள் மின் சாரம் தொடர்பான ஆபத்துகள், அவற்றால் ஏற்படும் தீ போன்ற பாதுகாப்புத் தரச் சோதனை களுக்கு உட்படுத்தப்படாதவை," என்று நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து 'ஸ்பிரிங் சிங்கப்பூர்' வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இந்தப் பொருத்திகள் பெரும் பாலும் இரண்டு வகைகளாக உள் ளன. மின்-ஸ்கூட்டர்களுடன் பொருத்தப்பட்டவை, குறுகிய காலத்தில் மின்னேற்றும் மின்னேற் றிகள் போன்றவை அவை. 2017-12-30 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!