சென்னை: உடனடியாகப் பணிக் குத் திரும்பாவிட்டால் உரிய நடவ டிக்கை எடுக்க நிர்வாகம் தயங் காது என வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழக அரசுப் போக்கு வரத்து ஊழியர்கள் தொடர்ந்து நேற்று ஆறாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் நேற்றும் இயக்கப்பட வில்லை. பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில், செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் விஜயபாஸ் கர், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்த மும் கையெழுத்தாகிவிட்டதால் இனி ஊழியர்கள் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை என்றார். மேலும் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என் றும் கூறினார். எனினும் ஊழியர் கள் தரப்பு இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை.